திருப்பூர்

சாலையில் ஓடும் கழிவு நீரால் மக்கள் அவதி

DIN

நத்தக்காடையூரில் சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் ஊராட்சியில் உள்ள ஓடக்காடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் 10 நாள்களுக்கு முன்பு அங்குள்ள விநாயகர் கோயில் அருகே சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யாததால், இந்த சாக்கடையில் உள்ள கழிவு நீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால், இப்பகுதி மக்களும், முத்தூரில் இருந்து நத்தக்காடையூர் வழியாக திருப்பூர் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். 
இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதோடி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. 
எனவே, சாக்கடைக் கால்வாயை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT