திருப்பூர்

மண் அள்ளிய இருவர் மீது வழக்குப் பதிவு

DIN

சேவூர் அருகே குளம், குட்டைகளில் மண் அள்ளிய இருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அவிநாசி வட்டாரத்தில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முறியாண்டம்பாளையம்  குளப்பகுதியில் முறைகேடாக மண் அள்ளிய ஒரு டிப்பர் லாரி, மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பிடித்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 
இதையடுத்து அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் அளித்த புகாரின் பேரில் மண்திருட்டில் ஈடுபட்ட முறியாண்டம்பாளையம் ஊராட்சி செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாகன உரிமையாளர் சின்னச்சாமி, செல்லகுமார் ஆகியோர் மீது சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT