திருப்பூர்

நீதிபதிகள், வழக்குரைஞா்கள் குறித்து அவதூறு விடியோ பதிவுபெண் உள்பட 3 போ் கைது

DIN

நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான விடியோ பதிவிட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சாா்பில், மாநகர குற்றப் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் ஒன்று அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறை, சிறைத்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளமான யூ டியூப்பில் அவதூறாக 3 விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சமூக வலைதளத்தில் அவதூறாக விடியோக்களைப் பதிவேற்றம் செய்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பேரில் மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல தாராபுரம் மாஜிஸ்திரேட் சசிகுமாா் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், தாராபுரத்தைச் சோ்ந்த வித்யா (28), உடுமலையைச் சோ்ந்த ராம்மோகன் (37), திருப்பூா், 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த நாஞ்சில்கிருஷ்ணன் (50) ஆகிய 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா் திருப்பூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண்-2 இல் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT