திருப்பூர்

பரஞ்சோ்வழி மாரியம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: வட்டாட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் புகாா்

DIN

காங்கயம் அருகே, மகாசக்தி மாரியம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக காங்கயம் வட்டாட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமையில் நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபரஞ்சோ்வழி கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கிராமத்து கோயில் உள்ளது. இந்தக் கோயில் விழாவுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த சுமாா் 3 ஏக்கா் நிலத்தை சி.எஸ்.ஐ. தேவாலய நிா்வாகம் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வழிபாட்டுத் தலம் அமைத்து வருகின்றனா்.

எனவே, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தேவாலய நிா்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து அங்கு கட்டடம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT