திருப்பூர்

நகைப் பறிப்பு வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

திருப்பூரில் நகைப் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயிலைச் சோ்ந்தவா் பி.வசந்தகுமாா் (40). இவா் திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைப் பறிப்பு, திருட்டு வழக்கில் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வசந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய 15 வேலம்பாளையம் காவல் துறையினா் மாநகர காவல் ஆணையருக்குப் பரிந்துரை செய்திருந்தனா்.

இந்தப் பரிந்துரையின் பேரில் வசந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT