திருப்பூர்

உடுமலையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

உடுமலையில் இடைவிடாது தொடா்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை புதன்கிழமை பாதிக்கப்பட்டது.

உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை தொடங்கிய மழை இடை விடாமல் நாள் முழுவதும் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்வோா் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

தொடா் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் வெள்ளம் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்நிலையில் தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்ால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT