திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கொப்பரை வரத்து குறைவு

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை வரத்து கடந்த வாரத்தை விட புதன்கிழமை மிகவும் குறைந்திருந்தது.

இங்கு வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு 2,624 கிலோ எடையுள்ள கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் கிலோ ரூ. 47.30 முதல் ரூ. 91.30 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 83.80.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 422 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. கடந்த வாரம் 8,885 கிலோ வரத்து இருந்த நிலையில் இந்த வாரம் 2,624 கிலோ மட்டுமே வரத்து இருந்தது.

மூன்று தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை வந்ததால், விற்பனைக் கூடத்துக்கு அதிக அளவிலான விவசாயிகள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT