திருப்பூர்

முத்தூர் விற்பனைக் கூடத்தில் 6.69 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 6.69 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது. 
இந்த வாரம் 13,283 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 4,788 கிலோ. 43 விவசாயிகளும், 10 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். கிலோ ரூ.22.10 
முதல் ரூ.26 வரை விலை போனது. சராசரி விலை கிலோ ரூ.25.70. 
இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 365.
 1,911 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. 66 விவசாயிகள், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கிலோ ரூ.52.50 முதல் ரூ. 95.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.82.60. இதன் விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 928.
விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 293 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 6.69 டன் தேங்காய், கொப்பரை விற்பனை 
நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT