திருப்பூர்

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 2 பேர் கைது

DIN

திருப்பூர் 15 வேலம்பாலையம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். 
திருப்பூர் 15 வேலம்பாளையம், தண்ணீர் பந்தல் காலனியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடந்த திங்கள்கிழமை ஒரு பெண் உள்பட 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த 20 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.
அப்போது, நகைகளின் மீது நிதி நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது, அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்த 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
இதன் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் பி.என்.ராஜன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், நகைகளை அடகு வைக்க முயன்ற 15 வேலம்பாளையம், புதுகாலனி முதல் வீதியைச் சேர்ந்த பி.சுதிர்குமார் (30), சேவூர், பண்டபாளையத்தைச் சேர்ந்த எஸ்.லீலாவதி (36) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளனர். மேலும், ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் இதே நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT