திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.12.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், புதுப்பை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 60 விவசாயிகள் தங்களுடைய 336 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 15,179 கிலோ. 
வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரிலிருந்து 9 வணிகர்கள் வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.52.30 முதல் ரூ.98.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.88.80. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.12 லட்சத்து 42 ஆயிரத்து 682 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT