திருப்பூர்

காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றில் வெள்ளம்: நீரில் மூழ்கிய தரைப்பாலங்கள்!

DIN

காங்கயம்: காங்கயம் அருகே, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலங்கள் நீரில் மூழ்கியதால், வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் கரணமாக கடந்த இரு தினங்களாக நொய்யல் ஆற்றில் அதிக அளவு வெள்ள நீர் செல்கிறது.

இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள மருதுறை, வெங்கரையாம்பாளையம், கொல்லன் வலசு ஆகிய மூன்று பகுதியில் இரு மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக திருப்பூர்-ஈரோடு மாவட்டங்கள் இடையே கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

நொய்யல் ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொது மக்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT