திருப்பூர் அருகே பழைய இரும்புக்கடையில் தீ விபத்து
திருப்பூர் அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர்திருப்பூர் அருகே பழைய இரும்புக்கடையில் தீ விபத்து
திருப்பூர் அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர் அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர், கூத்தம்பாளையம் பிரிவு அருகே உள்ள பாலாஜி நகரில் ஆறுமுகம்(40) என்பவர் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடித்து கடையைப்பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலையில் ஆறுமுகத்தின் கடையில் இருந்து கரும்புகை எழுப்பியதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் இரும்புக் கடையில் பரவிய தீயை அணைத்தனர். இதில், கடையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பொருள்கள் தேசமடைந்தன. மேலும், கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கமும் எரிந்து சேதமடைந்ததாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.