முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் நடந்த ரத்ததான முகாம் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
ரத்ததான முகாமில் பங்கேற்றவர்கள்
பகிர்:

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் அருகிலுள்ள தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு ரத்த தேவை இருப்பதாகக் கிடைத்த கோரிக்கையின் பேரில், சுகாதாரத் துறையுடன் இணைந்து வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர வைசியர் சங்கம் சார்பில் முகாம் நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜலட்சுமி முகாமைத் துவக்கி வைத்தார். மருத்துவர் சக்தி குழுவினர் ரத்ததானம் பெற்றனர். 41 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு அரசு ரத்த வங்கிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.