திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கால்நடை சந்தைகளை திறக்கக்கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கால்நடை சந்தைகளை திறக்கக்கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது, “தமிழகத்தில் கால்நடை சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மூடப்பட்டுள்ள கால்நடை சந்தைகளை உடனடியாக திறக்க வேண்டும். ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து முழுப்பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.” என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடமும் மனு அளித்தனர்.