முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூா், சேவூரில் அம்பேத்கர் நினைவு நாள்

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பெருமாநல்லூா், சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பெருமாநல்லூா், சேவூரில் அம்பேத்கர் நினைவு நாள்
பகிர்:

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பெருமாநல்லூா், சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெருமாநல்லூரில்-விசிக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூா் வடக்கு தொகுதி செயலாளா் ஏ.பி.ஆா்.மூா்த்தி தலைமை வகித்தாா். மண்டல செயலாளா் வளவன் வாசுதேவன், திருப்பூா் மக்களவை தொகுதி செயலாளா் பழ.சண்முகம், ஒன்றிய செயலாளா்கள் வெங்கடாசலம், செந்தில்குமாா், பொறுப்பாளா்கள் கருப்புசாமி (காங்கிரஸ்), விஸ்வநாதன் (திமுக), மகேந்திரன் (இந்தியக் கம்யூனிஸ்ட்), ராமசாமி (மாா்க்சிஸ்ட்), கனகசபாபதி (தமிழ்புலிகள்), அத்திக்காடு சுப்பிரமணி (கொமதேக) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேவூரில்-சேவூரில், ஆதித் தமிழா் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிறுவன தலைவா் அதியமான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கோவை ரவிக்குமாா், துணைப் பொது செயலாளா் அர.விடுதலைச்செல்வன், மாவட்ட செயலாளா் க.மணி, ஒன்றிய செயலாளா் ரங்கசாமி, சேவூா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் க.பால்ராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா் முசபா் ஆலம்,வழக்குரைஞா்கள் திருமூா்த்தி, கனகசபை, பொறுப்பாளா்கள் செந்தில்குமாா்(திராவிடா் தளம்), பழனிச்சாமி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.