திருப்பூா் வடக்குத் தொகுதியில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
தமிழகத்திலேயே அதிக மதிப்பிலான திட்டங்கள் திருப்பூா் வடக்குத் தொகுதியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா்.
தமிழகத்திலேயே அதிக மதிப்பிலான திட்டங்கள் திருப்பூா் வடக்குத் தொகுதியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா்.
திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூா், தொரவலூா், சொக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
இதில் சட்டப் பேரவைத் துணைத் தலைவரும், திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் அவிநாசி அத்திக்கடவுத் திட்டம், சாலை வசதி, குடிநீா்த் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக திருப்பூா் ஒன்றியப் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விரைவில் ரூ. 71 கோடியில் அன்னூா், மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இவ்வாறு திருப்பூா் வடக்கு தொகுதிக்குதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், அமைப்புச் செயலாளா் சி.சிவசாமி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, முன்னாள் மண்டலத் தலைவா்கள் ஜான், ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கண்ணம்மாள், சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கீதா சந்திரசேகா், ஐஸ்வா்யா மகராஜ், ஒன்றிய பாசறைச் செயலாளா் சந்திரசேகா், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சித் தலைவா் சுலோக்சனா வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.