முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே நடைபெற்ற பாரத பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்ட பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
எரகாம்பட்டியில் நடைபெற்ற பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்ட முகாமில் ஆா்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே நடைபெற்ற பாரத பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்ட பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள எரகாம்பட்டி சமுதாய நலக் கூடத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் பாரத பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை குண்டடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் குப்புசாமி தொடங்கிவைத்தாா். இதில் எரகாம்பட்டி, சிங்காரிபாளையம், பெல்லம்பட்டி, மானூா்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மக்காச்சோளம், பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்து கொண்டனா்.

இந்த முகாமில் குண்டடம் வேளாண்மை உதவி இயக்குநா் பழனிகுமாா் மற்றும் வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.