சேவூரில் ரூ.13 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.13 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.13 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 860 நிலக் கடலை மூட்டைகள் வந்திருந்தன. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.5,800 முதல் ரூ.6,050 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,450 முதல் ரூ.5,750 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,900 முதல் ரூ.5,250 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.