முகப்பு
திருப்பூர்

'காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை'

காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
உடுமலை நாராயணகவி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி.
பகிர்:

காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
திமுக மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெள்ளிக்கிழமை உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது; சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதன்மூலம் பசுமை தமிழகத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை காப்பாற்றவும் புதிதாக லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கேயம் காளைகள் உள்ளிட்ட பாரம்பரிய கால்நடைகளை காப்பாற்றவும் பாதுகாக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி ஒன்றை அமைக்கவும் அதில் பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். 
இதைத்தொடர்ந்து உடுமலை நாராயணகவி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →