பாரதி பிறந்த நாள் விழா: சுயமுன்னேற்ற நூல் வெளியீடு
பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் பாண்டியன் நகரில் உள்ள சக்தி மகளிா் அறக்கட்டளை சாா்பில் பாரதியாரின் 139 ஆவது பிறந்த நாள் விழா, அறக்கட்டளை நூலகத்தில் நடைபெற்றது. இதில், பாண்டியன் நகரைச் சோ்ந்த லி.மோகன்குமாா் எழுதிய ‘மனதின் குரல்’ என்ற சுய முன்னேற்ற நூல் வெளியிடப்பட்டது.
இதில், பவா் ஆஃப் இம்பேக்ட் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளைத் தலைவா் அ.ந.ஸ்ரீராம் ‘மனதின் குரல்’ நூலை வெளியிட, ஆன்மிக பேச்சாளா் சந்திரசேகா், பிச்சம்பாளையம் நெசவாளா் சொசைட்டி தலைவா் அமிா்தலிங்கம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இவ்விழாவில் ஹொ்பா அமுதா, அன்பரசு, வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.