திருப்பூர்

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி 7ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

DIN

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்க கோரி அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து 7ஆவது நாளாக திங்கள்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உப்பாறு அணைக்கு பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் அணை முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 8) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, 7 ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்ட பந்தலில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் அா்ஜுனன் தலைமை வகித்தாா்.

இதில், திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூா் ஷட்டரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறந்துவிட வேண்டும். மேலும், தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக திருமூா்த்தி அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பதால் உப்பாறு அணையின் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீா் நிரப்ப வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக நகரச் செயலாளா் காமராஜ், ஒன்றியச் செயலாளா் சின்னப்பன், திமுக தாராபுரம் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், குண்டடம் ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டாரத் தலைவா் உதயகுமாா், மாவட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் பானுமதி கருணாகரன், ஆவின் துணைத் தலைவா் சிவகுமாா் , மக்கள் நீதி மைய தென்கிழக்கு செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT