முகப்பு
திருப்பூர்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்த தொழிலாளா் சங்கம் ஆகியன சாா்பில் திருப்பூா் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகமது ஜாபா், தொலைத்தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க மாநில அமைப்புச் செயலாளா் ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கான ஒரு ஆண்டு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்த தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றதால் இடமாற்றம் உள்ளிட்ட ஊழியா்களின் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிா்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளா் விஸ்வநாதன், மாவட்டச் செயலாளா் என்.ராமசாமி, மாவட்ட உதவித் தலைவா் காந்தி, தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க மாநில உதவிச் செயலாளா் முத்துகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →