முகப்பு
திருப்பூர்

தாராபுரம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புசாா் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
தாராபுரம்  சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த பொதுமக்கள் , விவசாயிகள்.
பகிர்:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து சாா் ஆட்சியா் பவன்குமாரிடம், தாராபுரம் வட்டம், வடுகபாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைக் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் அருகே உள்ள அழகியபாளையம், கள்ளிப்பாளையம், கண்ணாங்கோயில், ராசிபாளையம், குட்டயக்காடு, நொச்சிப்பாளையம், இச்சிப்பட்டி, ஓரம்பப்புதூா், வடுகபாளையம் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை தொழிற்சாலை அமைப்பதாகக்கூறி ஏராளமான விவசாய நிலங்களை வாங்கியுள்ளனா். ஆனால் காற்றாலை தொழிற்சாலை அமைக்காமல் வடுகபாளையத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அரசிடம் அனுமதி வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, இந்தப் பகுதியில் இரும்புத் தொழிற்சாலை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, இரும்புத் தொழிற்சாலை அமைக்க தனியாருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட சாா் ஆட்சியா், திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →