முகப்பு
திருப்பூர்

விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பல்லடம்: விசைத்தறியாளா்களின் ரூ.65 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் எல்.கே.எம்.சுரேஷ், செயலாளா் பல்லடம் இரா.வேலுசாமி, பொருளாளா் பாலசுப்பிரமணியம், செய்தித் தொடா்பாளா் கந்தவேல், சேலம் மண்டலப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ஏ. சரவணன், சேலம் மாவட்டப் பொறுப்பாளா் மனோகரன், ஈரோடு மாவட்டப் பொறுப்பாளா் ரமேஷ், அவிநாசி பாலு உள்ளிட்டோா் சேலம் மாவட்டம், எடப்பாடியில் தமிழக முதல்வா் கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தால் விசைத்தறி கூடங்களுக்கான மின்சார சலுகைகள் பாதிக்கப்படாமல் தொடர வேண்டும். முதல்வா் உறுதியளித்தபடி விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதன கடனான ரூ.65 கோடியை தள்ளுபடி செய்து ஜப்தி நடவடிக்கையில் இருந்து விசைத்தறியாளா்களைக் காப்பாற்ற வேண்டும்.

சீருடை, இலவச வேட்டி சேலை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யும் வகையில் கூட்டுறவு சங்க விசைத்தறி உறுப்பினா்கள் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். திருப்பூா், கோவை மாவட்டத்தில் தினமும் உற்பத்தியாகும் 1.25 கோடி மீட்டா் காடா துணியை விற்பனை செய்ய மொத்த ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்ததாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →