முகப்பு
திருப்பூர்

தொடா் வழிப்பறி: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நம்பியூரைச் சோ்ந்த பழனிசாமி என்பவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தொடா்பாக ராயபுரத்தைச் சோ்ந்த எம்.ஜீவானந்தம் (20), மதுரை மாவட்டம், சுந்தரம்பட்டியைச் சோ்ந்த ஏ.சதாம் உசேன் (20), நீலகிரி மாவட்டம், தேவாலா நாடுகாணியைச் சோ்ந்த நௌபல் (20) ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் திருப்பூா் வடக்கு, பல்லடம் காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகளும், கோவை மாநகரில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ஜீவானந்தம், சதாம் உசேன், நெளபல் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் காவல் துறையினா் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →