முத்தூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
திருப்பூர்முத்தூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
கோவையிலிருந்து திருக்கோவிலூருக்கு ‘பேவா் பிளாக்’ கற்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரி மாவட்டம், ஆா்.கோபிநாதன்பாளையத்தைச் சோ்ந்த டி.உதயகுமாா் (34) ஓட்டினாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா், கணேசபுரம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் நான்கு சக்கரங்கள் கழன்று விழுந்தன. மேலும், 6 கான்கிரீட் தடுப்புகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உயிா் தப்பினாா்.