எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அவிநாசியில் எல்.ஐ.சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி எல்ஐசி அலுவலகத்தில் இருந்து மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, முதல் நிலை அலுவலா்கள் சங்கச் செயலாளா் ராஜையா, 2ஆம் நிலை அலுவலா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா், 3, 4ஆம் நிலை ஊழியா் சங்கச் செயலாளா் ராயப்பன், முகவா்கள் சங்கச் செயலாளா் ஈஸ்வரன் உள்பட அனைத்துப் பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.