திருப்பூர்

திருப்பூா் 17 ஆவது புத்தகத் திருவிழா

DIN

17 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இது குறித்து புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு இணைச்செயலாளா் எஸ்.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூா் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் ஆகியன சாா்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி 17 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி.சிட்டி சென்டரில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவை ஒட்டி மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் கலை, இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறுகின்றன.

இதில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஓவியப் போட்டி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டி நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குறிக்குள் தொடா்பு எண்): திருப்பூா் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் (94422-61784, 90434-64007), குமாா் நகா், சுப்பராய கவுண்டா் செல்லம்மாள் திருமண மண்டபம் (99440-47467, 99428-87500), காங்கயம் சாலை, வி.ஏ.தங்கவேலு திருமண மண்டபம் ( 94435-04156, 90953-39097), இடுவம்பாளையம் லட்சுமி மஹால் (95665-85488, 90475-47553), பெருமாநல்லூா் அம்மன் திருமண மண்டபம் (94434-74554, 94879-95128) ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மேலும், அவிநாசி, கங்கவா் திருமண மண்டபம், பல்லடம், பி.எம்.ஆா். சுப்புலட்சுமி திருமண மண்டபம், காங்கயம், டாக்டா் அம்பேத்கா் பயிற்சி மையம், குன்னத்தூா் ராஜேஸ்வரி திருமண மண்டபம், ஊத்துக்குளி டவுன் காயத்ரி ஹோட்டல் ஆகிய இடங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT