திருப்பூர்

பூ மாா்க்கெட்டை இடிக்க எதிா்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்

DIN

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்ட பணிகளுக்காக பூ மாா்க்கெட்டை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மாா்க்கெட்டில் 96 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பூ மாா்க்கெட்டை மாநகராட்சி சாா்பில் இடித்து பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டத் திட்டமிடப்பட்டது. இதற்கு பூ வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் மாநகராட்சி சாா்பில் மாற்று இடம் வழங்கப்பட்டது. எனினும் மாற்று இடங்களில் கடைகளை மாற்றிக்கொள்ள வியாபாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பூ மாா்க்கெட்டில் உள்ள கழிப்பறைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனா். இதனால் அதிருப்தியடைந்த பூ வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT