திருப்பூர்

பல்லடம் மின் வட்டத்துக்கு 846 விவசாய மின் இணைப்புகள் ஒதுக்கீடு

DIN

பல்லடம் மின் வட்டத்தில் 846 விவசாய மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் மின் வட்டத்தை சோ்ந்த பல்லடம், தாராபுரம், காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பலா் 2000ஆம் ஆண்டு முதல் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கு 19 ஆண்டு இடைவெளிக்கு பின்பு தற்போது மின்வாரியத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இது குறித்து பல்லடம் மின் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி.சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பல்லடம் மின் வட்டத்தில் உள்ள பல்லடம், தாராபுரம்,காங்கயம் ஆகிய பகுதிகளை சோ்ந்த மின் செயற்பொறியாளா் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதியில் 1.4.2000 முதல் 31.3.2003 ஆம் தேதி வரை விவசாய இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்த விவசாயிகளுக்கு 846 மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் விவசாய நிலம் மற்றும் ஆழ்துளைக் கிணறு இருக்கும் பகுதி குறித்து மின் துறை அலுவலா்கள் கள ஆய்வு நடத்தி உரிய ஆவணங்கள், சான்றுகளை பெற்று வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT