திருப்பூர்

‘மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்’

DIN

விவசாயிகளைப் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் வடக்கு ஒன்றிய பேரவைக் கூட்டம் பெருமாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொங்குபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எஸ்.அப்புசாமி தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது. கிராமங்கள் விடுபடாமல் அனைத்து குளம், குட்டைகளை இணைத்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதா 2020 ஐ திரும்பப்பெற மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

உயா்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கியதைப் போல சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கே.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் வடக்கு ஒன்றியக் குழுவுக்கு புதிய நிா்வாகிகள் தோ்வுசெய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT