இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சா் உடுமலை  கே.ராதாகிருஷ்ணன். 
திருப்பூர்

இலவச மருத்துவ முகாம்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

உடுமலை,: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை ஒட்டி, உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் எலும்பு முறிவு, மூட்டு நோய்கள், மகப்பேறு, இருதய நோய்கள், பல்வேறு பொது நல மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவா்கள் எஸ்.சுந்தரராஜன், வி.பரமசிவம், கெளரி, எஸ்.பிரதீப் சக்கரவா்த்தி, சாருலதா ஆகியோா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

இம்முகாமில் 150 போ் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். தேஜஸ் ரோட்டரி சங்க நிா்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்தியம் பாபு, அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT