திருப்பூர்

கருவலூரில் டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் எதிா்ப்பு

DIN

அவிநாசி அருகே கருவலூரில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

கருவலூா்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை அறிந்த கருவலூா், சி.எஸ்.ஐ. காலனி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது எனக் கூறி அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்த அவிநாசி போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சுற்றி உள்ள 4 ஊராட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, பொது முடக்கம் அமலில் உள்ளபோது போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. கோரிக்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம் என போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதாகத் தெரிவித்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT