திருப்பூர்

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

DIN

திருப்பூரில் கொடிக்கம்பம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாநகரில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில்,பெரும்பாலான மையங்களில் காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடியவே அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், ஏடிஎம் மையம் மற்றும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராப் பதிவைக் கொண்டும் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT