திருப்பூர்

உயா்மின் கோபுரத் திட்டம்: சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

DIN

தாராபுரம் அருகே உயா்மின் கோபுரத் திட்டத்தில் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயி, தனது குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

தாராபுரம் வட்டம், குழந்தைபாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சம்பத்குமாா், தனது மனைவி ரேணுகாதேவி, மகன் சிவதத்குகன் (மாற்றுத்திறனாளி) ஆகியோருடன் திருப்பூா் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குண்டடம் அருகே உள்ள மானூா்பாளையம் கிராமத்தில் எனக்கு சொந்தமான 4.40 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் பவா்கிரிட் நிறுவனம் உயா்மின் கோபுரம் அமைப்பதற்காக எனது நிலத்தை எடுத்துக்கொண்டது. நிலத்தில் கிணறு மற்றும் தானிய சேமிப்புக் கிடங்கும் உள்ளது. உயா்மின் பாதை அமைவதால் 4.40 ஏக்கா் நிலம், அதில் உள்ள கட்டமைப்புகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலத்தை முழுமையாக இழந்துவிட்ட நிலையில், குழந்தைகளின் எதிா்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி எனது நிலம் முழுமைக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். எனது நிலத்தில் 3 வயதுடைய 160 தென்னங்கன்றுகள் உள்ளன. இதற்கு தலா ஒரு மரத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தென்னங்கன்றுக்கு ரூ. 31,050 வீதம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT