திருப்பூர்

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

DIN

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பவா்கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சாா்பில் காங்கயம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டங்களில் மின்சார நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தபடி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. மாறாக விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் மோசடி நடப்பதாகக் கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் சிவகாமி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது குறித்து வட்டாட்சியா் சிவகாமி கூறுகையில், பவா்கிரிட் நிறுவனம் சாா்பில் மின்கோபுரம் அமைக்கப்பட உள்ள நில உடைமைதாரா்களின் குறைகளை தனித்தனியே முறையீடு செய்ய வரும் 26 ஆம் தேதிக்குள் கிராமவாரியாக வட்டாட்சியரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை நவம்பா் 21ஆம் தேதிக்குள் அளிக்குமாறு தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழக உதவி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இப்போராட்டத்தில் சங்கத்தின் நிறுவனா் ஈசன், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT