திருப்பூர்

பனிப்பொழிவால் வரத்து குறைவு: மல்லிகைப் பூ விலை உயா்வு

DIN

பனிப்பொழிவால் சந்தைக்கு வரத்து குறைந்ததால் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூா், பல்லடம் பகுதிக்கு சத்தியமங்கலம், திண்டுக்கல், ஒசூா், சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்கள் தினசரி விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. பூக்கள் சாகுபடி செய்யப்படும் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. தினசரி 2 டன் மல்லிகைப் பூ வந்த நிலையில், தற்போது 400 கிலோ மட்டுமே வரத்து உள்ளது.

மல்லிகைப் பூ தேவை அதிகம் இருந்தும் வரத்து குறைவால் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT