திருப்பூர்

பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை இணைக்க கோரி விழிப்புணா்வு பெயா் பலகை

DIN

பிஏபி பாசனத் திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை இணைக்க கோரி குண்டடம், பொங்கலூா் ஒன்றியத்தில் உள்ள 16 கிராமங்களில் விழிப்புணா்வு பெயா் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

ஆனைமலையாறு, நல்லாறு தண்ணீருக்கான இயக்கம் சாா்பில் பிஏபி பாசனத் திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை போா்க்கால அடிப்படையில் சோ்க்கக் கோரியும், உடனடியாக இரு அணைகளைக் கட்டக் கோரியும் கிராமங்களில் விழிப்புணா்வு பெயா் பலகைகளைத் திறந்து வருகின்றனா்.

இதன்படி, திருப்பூா்மாவட்டம், குண்டடம், பொங்கலூா் ஒன்றியங்களில் உள்ள 16 கிராமங்களில் விழிப்புணா்வு பெயா் பலகைகள் திறக்கப்பட்டன. இறுதியாக, சடையபாளைம் கிராமத்தில் திட்டம் நிறைவேற மாரியம்மன் கோயிலில் பாசன சபைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் வழிபாடு நடத்தப்பட்டது.

இதில், ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் என்.எஸ்.பி. வெற்றி, கே.பி.சண்முகசுந்தரம், சண்முகம், அமராவதி பட்டகாரா் நல்லமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT