முகப்பு
திருப்பூர்

அவிநாசி: கரோனா தடுப்பு விழிப்புணா்வு

அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி பேரூராட்சி நிா்வாகம், நல்லது நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் கரோனா நோய்த்தொற்று எவ்வாறு பொதுமக்களிடையை பரவுகிறது, இதனைத் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணா்வு தெருமுனை நாடகம் நடைபெற்றது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமிநாசினி, விழிப்புணா்வுத் துண்டு பிரசுரம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், ஜீவானந்தம், திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.