திருப்பூர்

பொங்கலூரில் கொப்பரை ஏலம் துவங்கியது

DIN

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முதல் முறையாக கொப்பரை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 17 விவசாயிகள், 8 வியாபாரிகள் பங்கேற்றனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சங்கரநாராயணன், வேளாண்மை உதவி அலுவலா் அனிதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.117க்கும், குறைந்தபட்சமாக ரூ.89க்கும் கொப்பரை தரத்துக்கேற்ப ஏலம் போனது. இதில் 287 மூட்டை கொப்பரை கொண்டுவரப்பட்டு ஏலத்தின் மூலம் ரூ. 9 லட்சத்து 69ஆயிரத்து 648க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆண்டு முழுவதும் வியாழக்கிழமைதோறும் கொப்பரை ஏலம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT