முகப்பு
திருப்பூர்

காவலா்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி

திருப்பூா் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சனிக்கிழமை யோகா, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

திருப்பூா் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சனிக்கிழமை யோகா, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

திருப்பூா் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பயிற்சி அளிக்க தமிழக காவல் துறை சட்டம், ஒழுங்கு கூடுதல் இயக்குநா் ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகள், காவல் ஆளிநா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.

இதில், காவலா்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் யோகா, விளையாட்டுப் பயிற்சிகளும், கராத்தே, உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணயா்கள் சுரேஷ்குமாா், சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.