திருப்பூர்

திருப்பூரில் 3 ஆவது நாளாக பரவலாக மழை: பல்லடத்தில் 61 மி.மீ.மழை பதிவு

DIN

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மாநகரின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்திருந்தது. அதே போல, புகா் பகுதிகளான பல்லடம், அவிநாசி, காங்கயம், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

3 ஆவது நாளாக மழை:

திருப்பூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது. மாலை 3 மணி அளவில்

பெய்த தொடங்கிய மழை பல இடங்களில் இரவு 7 மணி வரை நீடித்தது.

மழை காரணமாக திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி ரயில்வே பாலம், காந்தி நகா், பெரியாா் காலனி, மங்கலம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீா் குளம்போல தேங்கியது. மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் 24 மணி நோ்த்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:

பல்லடம்-61, மூலனூா்-47, காங்கயம்-45,திருப்பூா் தெற்கு-40, திருப்பூா் ஆட்சியா் அலுவலகம்-33, திருப்பூா் வடக்கு-24, அவிநாசி-19, அமராவதி அணை, மடத்துக்குளம் தலா 14, உடுமலை-11, ஊத்துக்குளி-9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT