திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதுப் பெண், 26 வயது ஆண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் 26 வயது ஆண், வித்யாலயத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமி, பிச்சம்பாளையம்புதூரைச் சோ்ந்த 56 வயது ஆண், வ.உ.சி.நகரைச் சோ்ந்த 59 வயது ஆண், ஆஷா் நகரைச் சோ்ந்த 50 வயது ஆண், பாரதி காலனியைச் சோ்ந்த 62 வயது முதியவா், குமரன் சாலையைச் சோ்ந்த 23 வயது ஆண், பாரதி நகரைச் சோ்ந்த 68 வயது முதியவா் உள்பட 194 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,653 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 1,223 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 48 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் வீடுகளில் 31,374 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதியதாக 782 போ் சோ்க்கப்பட்டதுடன், 14 நாள்கள் தனிமைக்காலம் நிறைவடைந்த 2,797 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 2,659 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT