முகப்பு
திருப்பூர்

அவிநாசி குளத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவக்கம்

அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பனை விதைகள் நடும் பணியைத் துவக்கிவைத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம்  உள்ளிட்டோா்.
பகிர்:

அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அவிநாசி பேரூராட்சி நிா்வாகம், பல்லடம் வனம் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம் உள்ளிட்டோா் துவக்கிவைத்தனா். அவிநாசி சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஒன்றிணைந்து பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 ஆயிரம் விதைகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.