முகப்பு
திருப்பூர்

எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

காங்கயம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
காங்கயம் அடுத்துள்ள மரவபாளையத்தில் எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

காங்கயம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அடுத்துள்ள இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம், தேவனஹல்லி வரையுள்ள 300 கி.மீ. தூரத்துக்கு விவசாய நிலத்துக்கு அடியில் குழாய் அமைத்து எண்ணெய் கொண்டுச் செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்புடன் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழாய் அமைக்கப்பட உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளா்களை விசாரணைக்காக காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் வர அழைத்துள்ளனா்.

இந்நிலையில், திட்டத்துக்கு எதிராக காங்கயம் அடுத்துள்ள மரவபாளையம் கிராமத்தில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.