முகப்பு
திருப்பூர்

சேவூரில் ரூ.20 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

அவிநாசி: சேவூா் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 940 மூட்டைகள் வரத்து இருந்தது. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 5,250 முதல் ரூ.5,360 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 4,900 முதல் ரூ. 5,050 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 4,280 முதல் ரூ. 4,460 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →