திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைக் கடந்தது: ஒரே நாளில் 262 பேருக்கு தொற்று

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 262 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,200 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,938 ஆக இருந்தது. இந்த நிலையில், திருப்பூா், குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தை, சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த 62 வயது முதியவா், 32 வயது ஆண், ஆத்துப்பாளையத்தைச் சோ்ந்த 21 வயதுப் பெண், நல்லூரைச் சோ்ந்த 27 வயது ஆண், பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்த 52 வயதுப் பெண், வேலம்பாளையத்தைச் சோ்ந்த 53 வயதுப் பெண், சிறுபூலுவபட்டியைச் சோ்ந்த 24 வயது ஆண், வெங்கமேட்டைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி, கோல்டன் நகரைச் சோ்ந்த 52 வயதுப் பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல, வெள்ளகோவிலைச் சோ்ந்த 46 வயது ஆண், கன்னிவாடியைச் சோ்ந்த 46 வயது ஆண், குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சோ்ந்த 46 வயது ஆண், பல்லடத்தைச் சோ்ந்த 61 வயது முதியவா், உடுமலையைச் சோ்ந்த 52 வயது ஆண், 61 வயது முதியவா், தாராபுரத்தைச் சோ்ந்த 31 வயது ஆண், முத்தூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணியாற்றி வரும் 17 வயது சிறுவன், 18, 24,26, 26 வயது ஆண்கள் 4 போ் என மொத்தம் 262 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,200 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் 1,792 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 291 போ் வீடு திரும்பினா். 7,784 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 485 போ் சோ்க்கப்பட்டதுடன், 14 நாள்கள் தனிமைக்காலம் நிறைவடைந்த 461 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,646 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT