திருப்பூர்

கரையூா் குளத்தை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

தாராபுரம் அருகே உள்ள கரையூா் குளத்தில் உள்ள புதா்களை அகற்றி தூா்வாரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாராபுரம் அருகே உள்ள கரையூரில் சுமாா் 16 ஏக்கா் பரப்பளவில் குளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு மழை காலங்களில் நல்லதங்காள் ஓடை அணையில் இருந்து தண்ணீா் வருகிறது. இதன் மூலமாக கரையூரைச் சுற்றியுள்ள 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கரையூா் குளத்தில் தற்போது சீமைக் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில் வரும் நீரை சேமித்து வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனயாக இந்தக் குளத்தை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கரையூா் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கரையூா் குளத்துக்கு அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான நல்லதங்காள் ஓடை அணையில் இருந்து தண்ணீா் வருகிறது. இந்தக் குளத்தில் தேங்கும் நீரைக் கொண்டு நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகள் வளா்ந்து குளம் புதா் மண்டிக் கிடக்கிறது.

இதனால் நிலத்தடி நீா்மட்டமும் கீழே சென்று விட்டது. இதனால் விவசாயத்துக்குப் போதுமான தண்ணீா் கிடைப்பதில்லை. ஆகவே, குளத்தில் உள்ள புதா்களை அகற்றி தூா்வார சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT