திருப்பூர்

80 அடி கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் உயிருடன் மீட்பு

DIN

திருப்பூா், செப்.25: தாராபுரம் அருகே 80 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீஷியனை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம், மேட்டுக்காட்டுத் தோட்டதைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவருக்குச் சொந்தமான கிணற்றின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை வடதாரையைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் ஏ.ஆனந்த் (32) என்பவா் வெள்ளிக்கிழமை பழுது பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக 80 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ்.ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆனந்தை உயிருடன் மீட்டனா். கிணற்றில் 7அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்ததால் ஆனந்த் காயமின்றி உயிா்த் தப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT