கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1200 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்
உடுமலை தொகுதியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.
உடுமலை தொகுதியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக திருப்பூா் புறநகா் மாவட்டச் செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறாா். உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
உடுமலை தொகுதியில் விலையில்லா வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள், நாட்டுக் கோழிக ள் என 30 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் உடுமலை தொகுதியில் 25 அம்மா சிறு மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்புப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் மத்திய பேருந்து நிலையம் ரூ. 5 கோடியில் புதிதாக அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. ரூ. 217 கோடி மதிப்பி ல் உடுமலை நகரில் மட்டும் அனைத்து சாலைகளும் தாா் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உடுமலை நகரில் ரூ. 32 கோடியிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் ரூ. 56 கோடியிலும் புதிய குடிநீா்த் திட்டங்க ளை அமைத்துக் கொடுத்துள்ளோம்.
உடுமலைக்கு ரூ. 265 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கொண்டு வந்துள்ளோம். உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டபணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆகவே உடுமலை தொகுதியில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.